ஜின தர்மத்தின் அறக்கருத்துகள், ஆன்மிகப் பயிற்சி, ஸ்வாத்யாயம், பூஜை, தர்மப் பிரவசனம் மற்றும் பல்வேறு அறப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்படும் ஆன்மிகத் தலம்.
A spiritual centre dedicated to the ethical teachings of Jain Dharma, spiritual practice, Svadhyaya, Puja, Dharma discourses, education and compassionate service.


ஸ்ரீ ஜினாய நம
Shri Jinaya Namah
ஸ்ரீ அஜிதநாதர் ஜினாலயம்Sri Ajithanathar Jinalayamஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம், ஜின தர்மத்தின் அறக்கருத்துகளை மக்களிடையே பரப்புதல், ஆன்மிகப் பயிற்சி மற்றும் ஸ்வாத்யாயத்தை வளர்த்தல், பூஜை, தர்மப் பிரவசனம் மற்றும் பல்வேறு அறப்பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.
Sri Vishakhacharya Tapo Nilayam functions with the objectives of spreading the ethical teachings of Jain Dharma among people, encouraging spiritual practice and Svadhyaya, conducting Puja and Dharma discourses, and undertaking various charitable activities.
புகைப்படங்கள் மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாக PPT போல மாறும். படத்தைத் திறந்து முழுத்திரையிலும் பார்க்கலாம்.
Photos change slowly, one by one like a PPT slideshow. Click any image to view it full screen.
ஒவ்வொரு படமும் சில விநாடிகள் இடைவெளியில் மெதுவாக மாறும்.
The slideshow changes slowly every few seconds.
1995ஆம் ஆண்டு, சந்த சிரோண்மணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாஸாகர் மகராஜ் அவர்களின் நல்சீடர் ஸ்ரீ 108 ஆர்ஜவஸாகர் மகராஜ் அவர்கள் தமிழக விஜயம் செய்தார்.
In 1995, Sri 108 Arjavasagar Maharaj, a devoted disciple of Acharya Sri 108 Vidyasagar Maharaj, visited Tamil Nadu.
தமிழகத்தில் சமணர்கள் வாழும் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, அங்குள்ள கற்கோயில்கள் மற்றும் ஜினாலயங்களை தரிசனம் செய்தார். செல்லும் கிராமங்கள் தோறும் சிராவகர்களுக்கும் பெரியவர்களுக்கும் தர்ம உபதேசம் செய்தார்.
He travelled to villages and towns where Jains lived, visited the rock temples and Jinalayas there, and gave Dharma teachings to Shravakas and elders in the villages he visited.
சிறுவர்களுக்காக மஹாவீரர் பெயரில் பாடசாலைகள் தொடங்கி, அறக்கல்வி வழங்க ஏற்பாடு செய்தார்.
Schools in the name of Mahavira were started for children, with arrangements to provide ethical education.
பெரியவர்களுக்காக 4 ஆண்டு பாடத்திட்டமும், சிறுவர்களுக்காக 5 ஆண்டு பாடத்திட்டமும் வகுக்கப்பட்டு, ஜின தர்மம் பரப்பப்பட்டது. பயின்றவர்களுக்கு பட்டமும் வழங்கப்பட்டது. இதற்காக பல்வேறு நூல்களும் வெளியிடப்பட்டன.
A four-year curriculum for adults and a five-year curriculum for children were framed, and Jain Dharma was taught. Certificates were also given to those who completed the studies. Various books were published for this purpose.
இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு அமைப்பு தேவை என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஸ்ரீ சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஆர்வலர்களுடன் இணைந்து பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
With the idea that an organisation was needed to carry out these activities, Sri Srutakevali Bhadrabahu Swami Sevadalam was formed, and various service activities were undertaken together with volunteers.
தானே சுயமாகத் தன் கைகளால் பூஜை செய்யவும், ஸ்வாத்யாயம் செய்யவும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.
He encouraged people to perform Puja themselves and to practise Svadhyaya (spiritual study).
இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து நிரந்தரமாக செயல்படுத்த ஒரு அமைப்பு தேவை என்ற நோக்கில், ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் என்ற பெயரில் அமைப்பு பதிவு செய்யப்பட்டு, 18.01.1998 அன்று தொடங்கப்பட்டது.
With the objective of coordinating these activities and continuing them permanently, an organisation named Sri Vishakhacharya Tapo Nilayam was registered and commenced on 18.01.1998.
நிரந்தரமாக ஒரு இடத்தில் இவ்வமைப்பு செயல்பட வேண்டும் என்ற நோக்கில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தக்கண்டராயபுரம் கிராமம், கீழ்நந்திநயம்பாடி சாலையில் இடம் வாங்கப்பட்டது.
With the aim of having the organisation function permanently from one location, land was purchased on Keel Nandhinayambadi Road, Thakkandarayanpuram Village, Vandavasi Taluk, Tiruvannamalai District.
அங்கு கட்டிடங்கள் அமைக்கப்பட்டு தபோ நிலையம் செயல்படத் தொடங்கியது.
With the objective of having the organisation function permanently from one location, land was purchased on Keezhnandhinayampadi Road in Thakkandarayanpuram village, Vandavasi Taluk, Tiruvannamalai District.
Buildings were constructed there and Tapo Nilayam began its activities.
1999ஆம் ஆண்டு ஸ்ரீ அஜிதநாதர் ஜினாலயம் கட்டப்பட்டது.
Sri Ajithanathar Jinalaya was built in 1999.
தபோ நிலைய வளாகத்தில் ஆதிநாதர் கோயில், சாந்திநாதருக்கான தனிக் கோயில் மற்றும் குந்தகுந்தர் சிலை உள்ளிட்ட ஆன்மிகச் சிறப்புகள் அமைந்துள்ளன.
The Tapo Nilayam campus includes the Adinathar Temple, a separate temple for Shanthinathar and a statue of Kundakundar, along with other spiritual features.
முக்கால தீர்த்தங்கரர்கள் தொடர்பான சமண மரபு மற்றும் தத்துவப் பின்னணியும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
Jain tradition and philosophical background associated with the three eras of Tirthankaras are also among the special features of this place.
1998ஆம் ஆண்டு பசுக்கள் காப்பகம் தொடங்கப்பட்டது.
The Gosala was started in 1998.
ஸ்ரீ வித்யாஸாகர் பெயரில் இக்கோசாலை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
This Gosala continues to be maintained in the name of Sri Vidyasagar.
தற்போது 50க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
The Gosala was started in 1998 and continues to be maintained in the name of Sri Vidyasagar.
More than 50 cows and bulls are currently cared for here.
தபோ நிலையத்தின் மூலம் குருகுலம் தொடங்கப்பட்டது.
A Gurukulam was started through Tapo Nilayam.
பின்னர் ஸ்ரீ மஹாவீர் உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது.
Later, Sri Mahavir Residential School was started and functioned for more than 15 years.
சமண மாணவர்களுக்காக விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Training classes and seminars are conducted during holidays for Jain students.
வெளியூரிலிருந்து குழுவாக வந்து தங்கி, ஜின தர்மம் மற்றும் தத்துவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Facilities have also been arranged for groups from outside to stay and undertake Jain Dharma and philosophical training.
குந்தகுந்தரின் நூல்கள், சமயசாரம், பிரவசனசாரம், நியமசாரம், பஞ்சாஸ்திகாயம், அஷ்டபாகுடம் உள்ளிட்ட பல்வேறு சமண நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
The works of Acharya Kundakundar, including Samayasara, Pravachanasara, Niyamasara, Panchastikaya and Ashtapahuda, have been translated and published in Tamil.
மேலும், ஜின தர்மம் தொடர்பான அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் “ஸ்ரீ சுருதகேவலி” என்ற மாதப் பத்திரிகையும் நடத்தப்பட்டு வந்தது.
The monthly magazine “Sri Srutakevali” was also published to share the ethical teachings of Jain Dharma with the wider community.
தசலஷணம், ஆஷ்டானிகம், சோடசகாரணம் போன்ற பருவ நாட்களில் விரதிகள் தபோ நிலையத்திற்கு வந்து தங்கி, பூஜை மற்றும் விதானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
During observances such as Dasalakshana, Ashtanika and Shodashakarana, Vratis come to Tapo Nilayam, stay here, and undertake worship and Vidhana.
அவர்களுக்கு சுத்த ஆகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Arrangements have been made to provide them with pure food.
மேலும், 50க்கும் மேற்பட்ட நபர்கள் தேச விரதிகளாக (பிரதிமாதாரிகளாக) இருந்து தங்களது ஆன்ம நலனைப் பேணி வருகின்றனர்.
During observances such as Dasalakshana, Ashtanika and Shodashakarana, Vratis stay at Tapo Nilayam and undertake Puja and Vidhana rituals.
Arrangements have been made to provide them with suitable pure vegetarian food.
More than 50 persons are also observing Desha Vratas (Pratimadharis) for their spiritual welfare.
சுற்றுப்புற கிராம மக்களின் நலனுக்காக சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ சேவை வழங்கப்பட்டு வந்தது.
Medical service based on Siddha medicine had been provided for the welfare of people in surrounding villages.
தபோ நிலையத்தின் ஆன்மிகச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக உதாசீள ஆசிரமம் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
Udhaseela Ashram has been established and maintained as part of the spiritual activities of Tapo Nilayam.
இன்று ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையம் பல்வேறு ஆன்மிக, கல்வி மற்றும் அறப்பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது.
Today, Sri Vishakhacharya Tapo Nilayam coordinates a range of spiritual, educational and charitable activities.
தினசரி பூஜை மற்றும் தர்மப் பிரவசனங்களை Zoom அல்லது YouTube மூலம் இணைந்து பார்க்கும் வசதியும், “ஸ்ரீ சுருதகேவலி” மாத இதழுக்கான இணைப்பும் இங்கு வழங்கப்படும்.
Links for daily pooja and Dharma discourses through Zoom or YouTube, along with the “Sri Srutakevali” monthly magazine, can be provided here.
தினசரி பூஜையை நேரலையில் காண Zoom / YouTube இணைப்பு இங்கு வழங்கப்படும்.
A Zoom / YouTube link for daily pooja can be added here.
இணைப்பு விரைவில்Link to be added →தர்மப் பிரவசனங்களை Zoom / YouTube மூலம் காண இணைப்பு இங்கு வழங்கப்படும்.
A Zoom / YouTube link for Dharma discourses can be added here.
இணைப்பு விரைவில்Link to be added →ஜின தர்மத்தின் அறக்கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் மாத இதழுக்கான இணைப்பு இங்கு வழங்கப்படும்.
The monthly magazine carrying the ethical teachings of Jain Dharma can be linked here.
மாத இதழ் இணைப்பு விரைவில்Magazine link to be added →ஸ்ரீ ஜினாய நம
Shri Jinaya Namah
நூலகத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 5,000 நூல்கள் உள்ளன.
The library contains around 5,000 books in Tamil, English and Hindi.
ஜின தர்மம், தத்துவம், ஆன்மிகம் மற்றும் சமண மரபு தொடர்பான பல்வேறு நூல்களை இங்கு பயிலலாம்.
A wide range of books on Jain Dharma, philosophy, spirituality and Jain tradition can be studied here.
குந்தகுந்தரின் முக்கிய நூல்கள் உள்ளிட்ட பல ஜின தர்ம நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
The library provides access to editions of important works of Acharya Kundakundar and other Jain Dharma texts.
குறிப்பாக:
In particular:
சமயசாரம் • பிரவசனசாரம் • நியமசாரம் • பஞ்சாஸ்திகாயம் • அஷ்டபாகுடம் • மேலும் பல ஜின தர்மம் மற்றும் தத்துவ நூல்கள்
In particular: Samayasara • Pravachanasara • Niyamasara • Panchastikaya • Ashtapahuda • and many other Jain Dharma and philosophical works.
ஜின தர்மம் மற்றும் தத்துவம் தொடர்பாகப் பயிலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் Ph.D. மாணவர்களுக்கு தேவையான நூல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
Students, researchers and Ph.D. scholars studying Jain Dharma and philosophy are provided with required books and philosophical explanations.
தபோ நிலையத்தில் நடைபெறும் தத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் ஆன்மிக வகுப்புகளுக்கு நூலகம் ஒரு முக்கியமான அறிவு வளமாக விளங்குகிறது.
The library is an important knowledge resource for the philosophical training, seminars and spiritual classes conducted at Tapo Nilayam.
வெளியூரிலிருந்து குழுவாக வந்து தங்கி தத்துவப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் இந்த நூலகம் பயனுள்ளதாக உள்ளது.
It is also useful for groups coming from outside, staying here and undertaking philosophical training.
“படித்தல் – சிந்தித்தல் – புரிதல் – நடைமுறைப்படுத்தல்”
“Reading – Reflection – Understanding – Practice”
என்ற அடிப்படையில் ஜின தர்ம அறிவையும் தத்துவ சிந்தனையையும் வளர்க்கும் நோக்கில் நூலகம் செயல்பட்டு வருகிறது.
The library functions with the aim of developing knowledge of Jain Dharma and philosophical thinking based on these principles.
ஜின தர்ம அறிவைத் தேடுவோருக்கு — ஒரு சிறந்த அறிவுக் களஞ்சியம்.
It is a valuable knowledge resource for those seeking knowledge of Jain Dharma.
ஸ்ரீ ஜினாய நம
Shri Jinaya Namah
ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தின் முக்கியமான சேவைப் பணிகளில் ஒன்றாக ஸ்ரீ வித்யாஸாகர் பசுக்கள் காப்பகம் (கோசாலை) செயல்பட்டு வருகிறது.
Sri Vidyasagar Gosala is one of the important service activities of Sri Vishakhacharya Tapo Nilayam.
1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பசுக்கள் காப்பகம், ஸ்ரீ வித்யாஸாகர் மகராஜ் அவர்களின் பெயரில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
Started in 1998, this Gosala continues to be maintained in the name of Sri Vidyasagar Maharaj.
இங்கு 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
More than 50 cows and bulls are protected and cared for here.
அவற்றிற்கு தேவையான உணவு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
More than 50 cows and bulls are protected and cared for here, with food, safety and ongoing care provided.
உயிர்களிடம் அன்பும் கருணையும் கொண்டு அவற்றைப் பாதுகாப்பது ஜின தர்மத்தின் முக்கியமான அறநெறிகளில் ஒன்றாகும்.
Protecting living beings with love and compassion is one of the important ethical principles of Jain Dharma.
அந்த அடிப்படையில், பசுக்கள் மற்றும் காளைகளைப் பாதுகாத்து பராமரிக்கும் சேவைப் பணியை தபோ நிலையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
Protecting living beings with love and compassion is an important ethical principle of Jain Dharma.
Based on this principle, Tapo Nilayam continues the service of protecting and caring for cows and bulls.
பசுக்கள் காப்பகத்தின் பராமரிப்பு மற்றும் சேவைப் பணிகளுக்கு பக்தர்கள், சிராவகர்கள் மற்றும் தர்ம அன்பர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.
Devotees, Shravakas and Dharma supporters may contribute according to their ability towards the maintenance and service of the Gosala.
கோசாலை சேவைக்கான நன்கொடைகள் மற்றும் பிற விவரங்களுக்கு தபோ நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
Devotees, Shravakas and Dharma supporters may contribute according to their ability towards Gosala maintenance and service.
Contact Tapo Nilayam for Gosala donations and other service details.
உயிர்களைப் பாதுகாப்போம்
கருணையை வளர்ப்போம்
தர்மச் சேவையில் இணைவோம்
Protect living beings
Grow compassion
Join Dharma service
ஸ்ரீ ஜினாய நம
Shri Jinaya Namah
ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தில், முதியோர் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியை அமைதியான ஆன்மிகச் சூழலில் கழிக்கவும், ஜின தர்மம் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபடவும் உதவும் வகையில் முதியோர் ஆன்மிக இல்லம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
The Spiritual Home is currently being developed at Sri Vishakhacharya Tapo Nilayam to help elders spend the later part of their lives in a peaceful spiritual environment and engage in Jain Dharma and spiritual reflection.
அமைதியான சூழலில் பூஜை, பிரவசனம், ஸ்வாத்யாயம் மற்றும் ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
The main objective is to provide a peaceful setting for Puja, Dharma discourses, Svadhyaya and other spiritual practices.
முதியோருக்கு தேவையான ஆதரவையும், ஆன்மிகச் சூழலையும் வழங்கும் வகையில் இந்த ஆன்மிக இல்லம் உருவாக்கப்பட்டு வருகிறது.
The Spiritual Home is being developed to provide elders with the necessary support and a spiritual environment.
இது தற்போது நடைபெற்று வரும் பணியாகும் (Under Process).
The Spiritual Home is being developed to provide elders with necessary support and a spiritual environment.
This is currently an ongoing project.
இந்த ஆன்மிக இல்லத்தின் பணிகள் நிறைவேற, தர்ம அன்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவு முக்கியமானதாகும்.
Support from Dharma well-wishers and donors is important for completing this Spiritual Home.
இத்திட்டத்திற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க விரும்புவோர் தபோ நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
Those wishing to contribute may contact Tapo Nilayam.
அமைதியான வாழ்வு • ஆன்மிகச் சிந்தனை • தர்ம நெறி
Peaceful Living • Spiritual Reflection • Dharma Values
ஸ்ரீ ஜினாய நம
Shri Jinaya Namah
ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பழமையான சமணத் திருத்தலங்கள் மற்றும் ஜினாலயங்கள் அமைந்துள்ளன.
Several ancient Jain sacred sites and Jinalayas are located in the areas surrounding Sri Vishakhacharya Tapo Nilayam.
தபோ நிலையத்திற்கு வருகை தரும் யாத்ரிகர்கள் மற்றும் பக்தர்கள் அருகிலுள்ள இத்திருத்தலங்களையும் தரிசித்து ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளலாம்.
Several ancient Jain sacred sites and Jinalayas are located in the surrounding areas of Sri Vishakhacharya Tapo Nilayam.
Pilgrims and devotees visiting Tapo Nilayam may also visit these sacred places as part of their spiritual journey.
Vangaram
Ponnur
Thrailkovil
இப்பகுதிகளில் அமைந்துள்ள சமணத் திருத்தலங்கள், தமிழகத்தின் சமண மரபு மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் முக்கியமான இடங்களாக விளங்குகின்றன.
These Jain sacred sites are important places reflecting the Jain tradition and spiritual heritage of Tamil Nadu.
தரிசனம் • ஆன்மிகம் • வரலாறு • சமணப் பாரம்பரியம்
Darshan • Spiritual Practice • History • Jain Heritage
ஸ்ரீ விசாகாச்சாரியார் தபோ நிலையத்தின் ஆன்மிக, கல்வி மற்றும் சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெற, தர்ம அன்பர்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவு முக்கியமானதாகும்.
Support from Dharma well-wishers and devotees is important for the continued spiritual, educational and service activities of Sri Vishakhacharya Tapo Nilayam.
தங்களால் இயன்ற அளவில் வழங்கப்படும் ஒவ்வொரு நன்கொடையும் ஜின தர்மப் பணிகளுக்கும், உயிரினப் பாதுகாப்பிற்கும், ஆன்மிக மற்றும் கல்விச் சேவைகளுக்கும் துணையாக அமையும்.
Support from Dharma well-wishers and devotees is important for continuing the spiritual, educational and service activities of Sri Vishakhacharya Tapo Nilayam.
Every donation, according to one's ability, supports Jain Dharma activities, protection of living beings, and spiritual and educational services.
விரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் சேவைக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.
Contribute towards providing food to Vratis and the public.
தினசரி பூஜை, பிரவசனம் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுக்கான பணிகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
Support daily Puja, Dharma discourses and other spiritual activities.
50க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரவு வழங்கலாம்.
Support the care and protection of more than 50 cows and bulls.
ஜின தர்ம நூல்கள், தத்துவப் பயிற்சிகள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான கல்விசார் பணிகளுக்கு பங்களிக்கலாம்.
Support Jain Dharma books, philosophical training, and educational activities for students and researchers.
தற்போது நடைபெற்று வரும் முதியோர் ஆன்மிக இல்லத் திட்டத்திற்கும் தங்களால் இயன்ற ஆதரவை வழங்கலாம்.
Support the ongoing Spiritual Home project for elders.

UPI ID: 9884059990m@pnb
Merchant: VISHAKACHARYA EDUCATIONAL AND AHIMSA PRACHAR KENDRA TRUST
வங்கி கணக்கின் மூலம் அல்லது QR Code மூலம் நன்கொடை வழங்கலாம்.
You may donate through the bank accounts above or by scanning the UPI QR Code.
தபோ நிலையத்தை எளிதாகத் தொடர்புகொள்ள தேவையான தகவல்கள் கீழே தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.
For easy reference, the contact number, email, address and location are provided separately below.
தர்மத்திற்கு அளிப்போம் • உயிர்களைக் காப்போம் • அறிவைப் பரப்புவோம் • ஆன்மிகச் சேவையில் இணைவோம்
Give to Dharma • Protect living beings • Spread knowledge • Join spiritual service